''ஜெயிலர் 2''…ரிலீஸ் தேதியைச் சொன்ன ரஜினிகாந்த்

''ஜெயிலர் 2''…ரிலீஸ் தேதியைச் சொன்ன ரஜினிகாந்த்


சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் நடந்த ஜெயிலர் 2 படப்பிடிப்பை முடித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது ஜெயிலர் 2 ரிலீஸ் குறித்த கேள்விக்கு, “ஜூன் 12” என்று பதிலளித்தார்.

மேலும், படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் ஹாசனுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *