சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் – ‘டூரிஸ்ட் பேமிலி’ டைரக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து!

சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் – ‘டூரிஸ்ட் பேமிலி’ டைரக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து!


சென்னை,

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். மேலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது.

இந்த படத்தினை தொடர்ந்து அபிஷன் ஜீவின்ந்த் அடுத்து எந்த நடிகரை வைத்த படம் இயக்குவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகமான அறிமுகமாகும் படத்தை ‘டூரிஸ்ட் பேமிலி’யின் இணை இயக்குநர் மதன் இயக்கியுள்ளார்.

படத்தில் பிசியாக நடித்து வரும் இயக்குநர், தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை நேற்று இருவீட்டாரின் சம்மதத்துடன் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் செய்து கொண்டார். முன்னதாக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், சவுந்தர்யா ரஜினிகாந்த், இயக்குநர்கள் ‘பூ’ சசி, ரஞ்சித் ஜெயக்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் திருமண பரிசாக பிஎம்டபிள்யூ காரை சமீபத்தில் பரிசளித்தார்.

இந்த நிலையில், திருமண நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் விசிட் ஆக சென்ற சிவகார்த்திகேயன் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *