சிக்கலில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள்|High Court rejects plea to quash ‘Manjummel Boys’ financial fraud case

சிக்கலில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள்|High Court rejects plea to quash ‘Manjummel Boys’ financial fraud case


சென்னை,

அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்கள் ஷோன் ஆண்டனி, பாபு சாஹிர், சவுபின் சாகிர் மீது மோசடி புகார் தெரிவித்திருந்தார். ரூ.7 கோடி பெற்றுக்கொண்டு பணத்தையோ, லாப விகிதத்தையோ தரவில்லை என எர்ணாகுளம் சார்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

பின்னர் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது வழக்கில் இருந்து முன் ஜாமீன் பெற்றுள்ள ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்கள், வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், தள்ளுபடி செய்யக்கோரிய மனுவை கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், விசாரணையைத் தொடரவும் போலீசாரிடம் கூறியுள்ளது. மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *