சமந்தா-ராஜ் நிடிமொரு காதல்: இயக்குனரின் முன்னாள் மனைவி வெளியிட்ட காட்டமான பதிவு

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, பல்வேறு சர்ச்சைகளை தாண்டி மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். நடிகை என்பதையும் தாண்டி தயாரிப்பாளராக மாறினார். சமீபத்தில் அவர் தயாரித்து வெளியான ‘சுபம்’ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில் சமந்தாவும், இயக்குனர் ராஜ் நிடிமொருவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக வலம் வருவதையும் பார்க்க முடிகிறது. ராஜ் நிடிமொருவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சமந்தா தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், மும்பையில் வீடு தேடிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
இதற்கிடையில் ராஜ் நிடிமொருவின் முன்னாள் மனைவியும், எழுத்தாளருமான சியாமளி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், “நம்பிக்கை என்பது விலை மதிப்பு இல்லாதது. ஒருமுறை அந்த நம்பிக்கை போய்விட்டால் எவ்வளவு கொடுத்தாலும் அதை வாங்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜ் நிடிமொரு-சமந்தாவின் காதலைக் கண்டித்து இந்த கருத்தை அவர் பதிவிட்டு உள்ளதாக பேசப்படுகிறது.