கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்|livingstons daughter jovita debuts as heroine in upcoming horror film avm

சென்னை,
பிரபல நகைச்சுவை நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார். கே.எஸ். கிஷன் இயக்கும் ஒரு படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளன. ஒரு படத்தில் நான் கதாநாயகியாக நடிக்கிறேன். அது ஒரு திகில் வகை படம். என் அப்பாவுக்கு நான் படங்களில் நடிப்பது பிடிக்கவே இல்லை. ஆனால், அவர் சம்மதித்த பிறகுதான் நான் இதில் நடித்தேன். என் அப்பாவும் இந்தப் படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். இதுவரை நாங்கள் ஒன்றாக நடித்ததில்லை’ என்றார்.
மேலும், தனது மகள் திரையுலகில் நுழைந்தது குறித்து லிவிங்ஸ்டன் கூறுகையில், “திரைப்படங்கள் எப்போதும் வெற்றியைப் பெறுவதில்லை. அதனால்தான் நான் என் மகளை படங்களில் இருந்து விலகி இருக்கச் சொன்னேன். அவள் ஒரு பாடகியாக வருவாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் நடிக்க முடிவு செய்தாள்” என்றார்.






