’அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி’ – மாளவிகா மோகனன்|Malavika Mohanan: Actresses hardly get substantial soles

’அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி’ – மாளவிகா மோகனன்|Malavika Mohanan: Actresses hardly get substantial soles


சென்னை,

தி ராஜா சாப் படத்தில் நடித்தது பற்றி மாளவிகா மோகனன் மனம் திறந்து பேசி இருக்கிறார். மாருதி இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ’தி ராஜா சாப்’ படம் ஜனவரி 10-ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதற்கிடையில், மாளவிகா மோகனன் தனது கதாபாத்திரத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ‘‘தி ராஜாசாப்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறேம்.பொதுவாக, ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் கதாநாயகி வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. இரண்டு பாடல்களும் நான்கு அல்லது ஐந்து காட்சிகளும் மட்டுமே இருக்கும். தி ராஜாசாப் படத்திலும் எனக்கு இரண்டு அல்லது மூன்று காட்சிகள் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி. ‘தி ராஜாசாப்’ படத்தில் எனக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. ஒரு கதாநாயகிக்கு இப்படி ஒரு வேடம் மிகவும் சிறந்தது. ஒரு அறிமுக படத்திற்கு இப்படி ஒரு வேடம் கிடைப்பது அதிர்ஷ்டம். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்,’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *