அஜித்தின் 'ஏகே 64' படத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்!

அஜித்தின் 'ஏகே 64' படத்தில் இணையும் முன்னணி நடிகர்கள்!


சென்னை,

‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து, மீண்டும் அஜித்குமாரின் படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக ஏகே 64 என்று பெரியடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அஜித் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அனிருத் இசையில் இப்படம் உருவாகிறது. இந்த படத்துக்காக வழக்கத்தை விட அஜித்குமாருக்கு அதிக சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் பான்- இந்தியா படமாக, பல மொழி ரசிகர்களைக் கவரும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் அஜித்குமாருடன் மேலும் 2 முன்னணி நடிகர்கள் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இது வில்லன் கதாபாத்திரமா? அல்லது முக்கிய தோற்றமா? என்பது இப்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *