’12-த் பெயில்’ நடிகரின் புதிய படம்…ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு|Aankhon ki gustaakhiyan movie ott streaming details locked

சென்னை,
’12-த் பெயில்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற விக்ராந்த் மாஸ்ஸி நடித்திருக்கும் ‘ஆன்கோன் கி குஸ்டாக்கியான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ5 தளத்தில் செப்டம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் எழுதி சந்தோஷ் சிங் இயக்கிய “தி ஐஸ் ஹேவ் இட்” கதையை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், இப்படம் எதிர்பார்த்த அளவில் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறவில்லை.
பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூர் இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இது அவரது முதல் படம். ஷனாயா நாடகக் கலைஞராகவும், விக்ராந்த் பார்வையற்ற இசைக்கலைஞராகவும் நடித்திருக்கிறார்கள்.