'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்துள்ள திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கியுள்ளார். கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இன்றைய தலைமுறையினரின் காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 11-ம் தேதி ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.