ஷைன் டாம் சாக்கோ நடித்த ‘மீஷா’ படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் ‘பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில், இவரது நடிப்பில் கடந்த ஜூலை மாதம் மீஷா என்ற படம் வெளியானது. இந்த படத்தினை எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படம், ஒரு வனக் காவலர் மற்றும் அவரது நண்பர்களின் கதையைப் பின்தொடர்கிறது. சுவாரஸ்யமான இந்த திரில்லர் திரைப்படத்தில் கதிர், சுதி கொப்பா, ஹக்கிம் ஷாஜகான் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், மீஷா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12ந் தேதி மனோரமாமேக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.