ரூ.7,200 கோடி வசூல்…ஓடிடிக்கு வந்துள்ள பிளாக்பஸ்டர் படம்…எதில் பார்க்கலாம்?|Rs. 7,200 crore collection… The blockbuster film has come to OTT… Where can you watch it?

சென்னை,
ஹாலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான பிரான்சைஸ்களில் ஒன்று ஜுராசிக் பார்க். இந்தியாவிலும் இப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே பல ஜுராசிக் படங்கள் வெளியாகியுள்ளன. அவை அனைத்தும் பிளாக்பஸ்டர்களாகின.
இதில் சமீபத்தில் வெளியான படம் ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த். கடந்த ஜூலை 2 அன்று உலகம் முழுவதும் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.
முந்தைய படங்களைப் போல இல்லாவிட்டாலும், இது மிகப்பெரிய வசூலைப் பெற்றது. இந்த படம் உலகளவில் ரூ.7,200 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாகத் தெரிகிறது.
இப்படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இப்போது, மற்றொரு ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டாரிலும் வெளியாகி உள்ளது. ஆங்கிலத்துடன் சேர்த்து, தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இப்படத்தைப் பார்க்கலாம்.
ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த் படத்தை கேரத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ளார். ஸ்கார்லெட் ஜோஹன்சன் , ஆட்ரினா மிராண்டா, எட் ஸ்க்ரெய்ன், ஜொனாதன் பெய்லி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.






