ரூ. 488 கோடி பட்ஜெட்… ரூ. 4,065 கோடி வசூல்…உலகளவில் மிகப்பெரிய வசூலைப் பெற்ற ஹாரர் திரில்லர்…எதில் பார்க்கலாம்?|american horror thriller the conjuring last rites movie now streaming on amazon prime video ott

சென்னை,
தற்போது, ஓடிடியில் கிரைம், திகில், சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் படங்கள் அதிகமாக பார்க்கப்படுகின்றன. எந்த மொழியாக இருந்தாலும், பார்வையாளர்கள் இந்த வகை படங்களைப் பார்கிறார்கள். அதன்படி, ஓடிடி நிறுவனங்கள் இந்த வகையான படங்களை ஒவ்வொரு வாரமும் ஸ்ட்ரீமிங்கிற்கு கொண்டு வருகின்றன.
அந்தவகயில், நேற்று ஒரு திகில் திரில்லர் படம் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்தது. செப்டம்பர் 05-ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பிளாக்பஸ்டராக மாறியது. இது பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. ரூ. 488 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ. 4,065 கோடி வசூலித்தது. உலகளவில் மிகப்பெரிய வசூலைப் பெற்றது.
கன்ஜுரிங் படங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த வரிசையில் ஒன்பதாவதாக வெளியான படம் ‘தி கன்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ்’. ஸ்மர்ப் ஹண்டிங் வழக்கை அடிப்படையாகக் கொண்ட இந்த திகில் திரில்லர் படத்தை மைக்கேல் சாவேஸ் இயக்கியுள்ளார். இதில் வேரா பார்மிகா, பேட்ரிக் வில்சன், மியா, பென் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. நேற்று இந்த படம் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்தது.