மிராஜ் : 'திரிஷ்யம்' இயக்குனரின் புதிய திரில்லர் படம்…எப்போது, எங்கே பார்க்கலாம்?

சென்னை,
திரிஷ்யம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ஜீத்து ஜோசப். தற்போது அவர் அதன் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில், அவர் இயக்கிய சமீபத்திய படம் இப்போது ஓடிடியில் வெளியாக தயாராக உள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கிய சமீபத்திய படம் ‘மிராஜ்’. இதில் ஆசிப் அலி மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். கடந்த செப்டம்பர் 19 அன்று வெளியான இந்த திரில்லர் படம் கலவையான வரவேற்பைப் பெற்றது.
இப்போது இது வருகிற 20 முதல், அதாவது அடுத்த திங்கட்கிழமை முதல் சோனி லிவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்புடன், ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.