பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த உண்மை கதை… ஓடிடியில் ’ஹாரர் திரில்லர்’ – எதில் பார்க்கலாம்|The true ‘horror thriller’ story that shook the box office…now on OTT

சென்னை,
தற்போது உண்மையான நிகழ்வுகள் மற்றும் பிரபலமானவர்களின் வாழ்க்கைக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் அதிக பார்வைகளைப் பெறுகின்றன. இப்போது நாம் பேசப்போகும் படமும் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்ததுதான் .
கர்நாடக காடுகளில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. இந்தப் படம் 2010- ல் கர்நாடகாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாரர் திரில்லர். கன்னட பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்தது . வெறும் ரூ .30 லட்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மொத்தம் ரூ. 5 கோடி வசூலித்தது.
படத்தின் கதைக்கு வருகையில், சில இளைஞர்கள் மலையேற காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு ஒரு ஆவணப்படத்தை படமாக்க திட்டமிடுகின்றனர் . காட்டின் மிக உயர்ந்த சிகரத்தை அடையும் நோக்கத்துடன் அவர்கள் பயணம் செய்கிறார்கள் . அப்போது அவர்கள் விசித்திரமான அனுபவங்களை சந்திக்கிறார்கள். மிக உயர்ந்த சிகரத்தை அடைய வேண்டும் என்ற இளைஞர்களின் குறிக்கோள் நிறைவேறியதா ? இடையில் அவர்கள் என்ன மாதிரியான சம்பவங்களைச் சந்தித்தார்கள் ? அவர்கள் காட்டை விட்டு வெளியேறினார்களா ? இல்லையா ? என்பதை தெரிந்து கொள்ள இந்த படத்தைப் பாருங்கள்.
இப்படத்தில் பெயர் ’6-5=2’. இதில் , தனுஜா , கிருஷ்ண பிரசாத், ஜானு மற்றும் விஜய் சந்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர் . தற்போது, இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது . இதில் சில காட்சிகள் மிகவும் பயத்தை ஏற்படுத்தும்.. எனவே குழந்தைகளுடன் இதைப் பார்க்காமல் இருப்பது நல்லது. மேலும் , இதயப் பிரச்சினை உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது .






