பண ஆசை…குறுக்கு வழியில் சம்பாதித்து மாட்டிக்கொள்ளும் கதாநாயகன் – ஓடிடியில் ஒரு அரசியல் திரில்லர்|The desire for money…the protagonist gets trapped in a crooked path

பண ஆசை…குறுக்கு வழியில் சம்பாதித்து மாட்டிக்கொள்ளும் கதாநாயகன் – ஓடிடியில் ஒரு அரசியல் திரில்லர்|The desire for money…the protagonist gets trapped in a crooked path


சென்னை,

சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்த படம் மிதமாக ஓடியது. அதன் சுவாரஸ்யமான கதைக்களத்தால் பார்வையாளர்களை நன்றாகக் கவர்ந்தது. இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வசூலைப் பெற்றது.

இந்தப் படத்தின் பெயர் சக்தித் திருமகன், இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தார். அருண் பிரபு இயக்கிய இந்த படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. தமிழ் , தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இந்த படத்தின் கதைக்கு வரும்போது.. தலைமை செயலகத்தில் பணியாற்றும் விஜய் ஆண்டனி, யாருக்கும் தெரியாமல் ‘அரசியல்’ இடைத்தரகராகவும் செயல்படுகிறார். அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை சொல்லும் அத்தனை வேலைகளையும் செய்து பெரியளவில் ‘கமிஷன்’ பெற்றுக்கொள்கிறார். அதன்மூலம் ஏழை-எளியோருக்கு பண உதவிகளை செய்தும் வருகிறார்

இதற்கிடையில் கோடிக்கணக்கான பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு செயலில் இறங்கி, மத்திய மந்திரி ‘காதல் ஓவியம்’ கண்ணனிடம் சிக்கி கொள்கிறார் விஜய் ஆண்டனி. இதனால் குறுக்கு வழியில் அவர் சேர்த்த பணம் அவரது கையை விட்டு போகிறது. பணத்தை பறிகொடுக்கும் விஜய் ஆண்டனி, கண்ணனின் ஜனாதிபதி கனவுக்கு தடைபோட முயற்சிக்கிறார்? அது நடந்ததா? என்பதே மீதி கதை.



admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *