நிவின் பாலி நடித்த புதிய வெப் தொடர்…டிரெய்லர் வெளியீடு| trailer of Pharma out now

திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடன்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் எல்சியுவின் கீழ் இருவாகி வரும் பென்ஸ் படத்திலும் நடித்துவருகிறார்.
இதற்கிடையில், அவர் நடித்துள்ள வெப் தொடர் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. பி.ஆர். அருண் எழுதி இயக்கி உள்ள இந்த வெப் தொடருக்கு பார்மா எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இது வருகிற 19-ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இத்தொடரின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இது மட்டுமில்லாமல், சர்வம் மாயா என்ற படத்திலும் நிவின் பாலி நடித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.






