’டைஸ் ஐரே’ படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற பிரபல ஓடிடி தளம்?

சென்னை,
பிரணவ் மோகன்லாலின் திகில் படமான டைஸ் ஐரே சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்தது. முன்னதாக மிகவும் பாராட்டப்பட்ட திகில் படங்களான பூதகலம் மற்றும் பிரமயுகம் ஆகியவற்றை இயக்கிய ராகுல் சதாசிவன், இப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில், வெளியான பல மலையாள வெற்றிப் படங்களின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றது. இதன் மூலம் டைஸ் ஐரேவையும் அந்நிறுவனமே வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிரது.
இப்படத்தில் சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப் மற்றும் அருண் அஜிகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.






