“கான்ஜுரிங்” முதல் “பாம்” வரை.. இந்த வார ஓடிடி லிஸ்ட்

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகின்றன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓடிடி தளங்கள் |
தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் | பிரைம் வீடியோ ரென்ட் |
வார் 2 | நெட்பிளிக்ஸ் |
ராம்போ | சன் நெக்ஸ்ட் |
வேடுவன் | ஜீ5 |
மிராய் | ஜியோ ஹாட்ஸ்டார் |
திரிபநாதரி பார்பரிக் | சன் நெக்ஸ்ட் |
உருட்டு உருட்டு | சிம்பிலி சவுத் |
பாம் | ஆஹா தமிழ் |
“தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்”
‘தி கன்ஜுரிங் லாஸ்ட் ரைட்ஸ்’ என்ற திகில் திரில்லர் படத்தை மைக்கேல் சாவேஸ் இயக்கியுள்ளார். இதில் வேரா பார்மிகா, பேட்ரிக் வில்சன், மியா, பென் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். உலகளவில் மிகப்பெரிய வசூலைப் பெற்ற இப்படம் கடந்த 6ந் தேதி பிரைம் வீடியோ ரென்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
“வார் 2”
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் வார் 2 படம் வெளியானது. இதில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
“ராம்போ”
முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் “ராம்போ”. இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் நாளை (10-ந் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“வேடுவன்”
பவன் இயக்கத்தில் கண்ணா ரவி நடித்துள்ள வெப் தொடர் “வேடுவன்”. இதில் சஞ்சீவ், ஐஸ்வர்யா ரகுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“மிராய்”
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள படம் ‘மிராய்’. இதில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். வித்தியாசமான கதையில் உருவான இப்படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“திரிபநாதரி பார்பரிக்”
மோகன் ஸ்ரீவத்சா இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவான படம் திரிபநாதரி பார்பரிக். இதில் சத்யராஜ், சத்யம் ராஜேஷ், உதய பானு மற்றும் சாஞ்சி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளது.
“உருட்டு உருட்டு”
இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் காமெடி கதைக்களத்தில் வெளியான படம் உருட்டு உருட்டு. இதில் கதாநாயகனாக நகேசின் பேரன் கஜேஷ் நடித்துள்ளார். இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“பாம்”
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான படம் பாம். இதில் ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், நாசர், அபிராமி மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.