‘கலியுகம்’ முதல் ‘3பிஎச்கே’ வரை.. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓடிடி தளங்கள் |
கலியுகம் | டென்ட்கொட்டா |
தம்முடு | நெட்பிளிக்ஸ் |
சுரபில சுந்தர ஸ்வப்னம் | சன் நெக்ஸ்ட் |
சூப்பர் ஜிந்தகி | மனோரமா மேக்ஸ் |
ஹவுஸ் புல் 5 | அமேசான் பிரைம் |
கட்ஸ் | டென்ட்கொட்டா |
3 பிஎச்கே | சிம்பிலி சவுத், அமேசான் பிரைம் |
‘கலியுகம்’
பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘கலியுகம்’. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உளவியல் த்ரில்லர் கதையில் உருவான இப்படம் கடந்த 28ந் தேதி டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
‘தம்முடு’
வேணு ஸ்ரீராம் நித்தின் கதாநாயகனாக நடித்துள்ள படம் தம்முடி. இதில் காந்தாரா புகழ் சப்தமி கவுடா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நாளை ஆகஸ்ட் 1ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
‘சுரபில சுந்தர ஸ்வப்னம்’
டோனி மேத்யூ இயக்கத்தில் குடும்ப கதை களத்தில் உருவான படம் சுரபில சுந்தர ஸ்வப்னம். இதில் சோனி சோஜன், பீனா தங்கச்சன், ஸ்டெபின், சுபின் திடநாடு, குங்பூ சஜித், சஞ்சு நெடுங்குன்றேல், உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
‘சூப்பர் ஜிந்தகி’
அறிமுக இயக்குனர் விந்தேஷ் இயக்கத்தில் உருவான படம் சூப்பர் ஜிந்தகி. இதில் தியான் ஸ்ரீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
‘ஹவுஸ் புல் 5’
5-வது பாகத்தை எட்டிய முதல் இந்திபடம் என்ற பெருமை ‘ஹவுஸ்புல்’ படத்தையே சேரும். இதில், அக்சய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பாஜ்வா, நர்கிஸ் பக்ரி, பர்தீன் கான், சவுந்தர்யா சர்மா, ஜாக்கி ஷெராப், உள்ளிட்ட 24 நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
‘கட்ஸ்’
அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ். ரங்கராஜ், நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதை களத்தில் உருவான இப்படம் நாளை டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
‘3 பிஎச்கே’
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயாணி நடிப்பில் உருவான படம் 3பிஎச்கே. மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை சிம்பிலி சவுத், அமேசான் பிரைம் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.