ஓ.டி.டி.யில் வெளியானது 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'

ஓ.டி.டி.யில் வெளியானது 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'


அசோக் செல்வன் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளார். அவந்திகா மிஸ்ரா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான காமெடியாக இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓ.டி.டி வெளியீட்டை எதிர்நோக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இப்படம் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *