ஓடிடியில் வெளியாகும் "லோகா" திரைப்படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் – கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான ‘லோகா ‘ படம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தின் வசூலை முறியடித்துள்ளது. ஒரு பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. இப்படம் கிட்டத்தட்ட உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தியேட்டர்களில் ஹிட் கொடுத்த “லோகா” படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 23-ந்தேதி ‘லோகா’ படம் வெளியாகும் என கூறப்படுகிறது.