ஓடிடியில் வெளியாகும் ‘பாகுபலி தி எபிக்’ …எப்போது, எதில் பார்க்கலாம்?|’Baahubali The Epic’ has an OTT date fixed.. When will it be streaming..?

சென்னை,
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம், இந்திய சினிமாவில் எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். பாகுபலி தி பிகினிங் மற்றும் பாகுபலி தி கன்க்ளூஷன் ஆகியவை தெலுங்கு சினிமாவின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தின. பிரபாஸ், ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் அபார வசூலைப் பெற்றது.
இந்த இரண்டு படங்களையும் இணைத்து ‘பாகுபலி தி எபிக்’ என்ற தலைப்பில் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியிட்டனர். இரண்டு பாகங்களையும் ஒரே படமாகப் பார்க்க ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளில் வரிசையில் நின்றனர்.
இப்போது, இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. ‘பாகுபலி தி எபிக்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பரிசாக நாளை முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுறது.
3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் ஓடிடியில் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






