ஓடிடியில் வெளியாகும் தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்"… எதில், எப்போது பார்க்கலாம்?

ஓடிடியில் வெளியாகும் தனுஷின் "தேரே இஷ்க் மெய்ன்"… எதில், எப்போது பார்க்கலாம்?


தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான‘தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். ஆனந்த் எல் ராய், தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களான ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. படத்தின் கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.147 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 23ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *