ஓடிடியில் வெளியாகும் ''தலைவன் தலைவி'' படம்… எங்கு, எப்போது பார்க்கலாம்?

சென்னை,
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் கடந்த மாதம் 25ந் தேதி வெளியான படம் ‘தலைவன் தலைவி’. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி – பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கணவன் – மனைவி இடையே உள்ள உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 22ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.