ஓடிடியில் வெளியாகும் ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’.. எதில், எப்போது பார்க்கலாம்?

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரில்லர் படம் ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’. இந்த படத்தினை இந்திரனீல் கோபிகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஜி ஆகியோர் எழுதி இயக்கியுள்ளனர். இதில் டிடெக்டிவாக தியான் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார்.
மேலும், சிஜு வில்சன் , கோட்டயம் நசீர், சீமா ஜி. நாயர், அமீன், நிஹால் நிஜாம் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12ந் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.