ஓடிடியில் முதலிடம் பெற்ற “ஓஹோ எந்தன் பேபி”.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தினை விளம்பரப் பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இதில் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர். காதல் கதைக்களத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த 8ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை போல ஓடிடி தளத்தில் வரவேற்பை பெற்றுவருகிறது.
அதாவது, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் “ஓஹோ எந்தன் பேபி” திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மை ஆக்ஸ்வேர்ட் இயர் என்ற படமும் உள்ளது. இந்த நிலையில் “ஓஹோ எந்தன் பேபி” படக்குழு டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்ததை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.