ஓடிடிக்கு வரும் டைகர் ஷெராப்பின் "பாகி 4"…எதில், எப்போது பார்க்கலாம்?

சென்னை,
பாலிவுட் ஆக்சன் ஹீரோ டைகர் ஷெராப்பின் “பாகி 4” இப்போது திரையரங்குகளில் இருந்து ஓடிடிக்கு வருகிறது. இந்த படத்தை ஏ. ஹர்ஷா இயக்கியுள்ளார், மேலும் சோனம் பஜ்வா கதாநாயகியாக நடித்திருக்கிறார், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்து, சஞ்சய் தத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்திய தகவலின்படி, “பாகி 4” திரைப்படம் நாளை முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்ற பேச்சு உள்ளது. இருப்பினும், படத்தைப் பார்க்க சிறிது தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுவரை பிரைம் வீடியோவிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.