இந்த வார ஓடிடி ரிலீஸ்!.. எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓடிடி தளங்கள் |
பகாசுரா ரெஸ்டாரண்ட் | பிரைம் வீடியோ |
சு ப்ரம் சோ | ஜியோ ஹாட்ஸ்டார் |
கூலி | பிரைம் வீடியோ |
மீஷா | மனோரமாமேக்ஸ் |
டிடெக்டிவ் உஜ்வாலன் | சிம்பிலி சவுத் |
டூ யூ வான்னா பார்ட்னர் | பிரைம் வீடியோ |
சயாரா | நெட்பிளிக்ஸ் |
“பகாசுரா ரெஸ்டாரண்ட்”
எஸ்.ஜே. சிவா இயக்கத்தில் வித்தியசமான கதைக்களத்தில் உருவான படம் பகாசுரா ரெஸ்டாரண்ட். இதில் பிரவீன், ஹர்ஷா செமுடு மற்றும் ஜெய் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 8ந் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் வருகிற 12ந் தேதியில் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளது.
“சு ப்ரம் சோ”
ஜே.பி.துமினாட் இயக்கிய நகைச்சுவை திரைப்படம் சு ப்ரம் சோ. இதில் ஷனீல் கௌதம், ஜேபி துமிநாட், சந்தியா அரகெரே, பிரகாஷ் துமிநாட் , தீபக் ராய் பனாஜே ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவையான இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் மூலம் கிராம வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது இந்தக் கதை. இப்படம் கடந்த 9ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
“கூலி”
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் கூலி. . இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
“மீஷா”
எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ள படம் மீஷா. சுவாரஸ்யமான திரில்லர் கதையில் உருவான இந்த படத்தில் ஷைன் டாம் சாக்கோ, கதிர், சுதி கொப்பா ஆகிய நடித்துள்ளனர். இப்படம் நாளை மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“டிடெக்டிவ் உஜ்வாலன்”
மலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரில்லர் படம் ‘டிடெக்டிவ் உஜ்வாலன்’. இந்த படத்தினை இந்திரனீல் கோபிகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஜி ஆகியோர் எழுதி இயக்கியுள்ளார். இதில் டிடெக்டிவாக தியான் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார். இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“டூ யூ வான்னா பார்ட்னர்”
நடிகைகள் தமன்னா பாட்டியா மற்றும் டயானா பென்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் வெப் தொடர் ”டூ யூ வான்னா பார்ட்னர்” . இந்தத் தொடரை கரண் ஜோஹர், அதர் பூனவல்லா மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த தொடர் நாளை பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“சயாரா”
அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடித்த காதல் படம் சயாரா. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.