இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்கள் (04.08.25 முதல் 10.08.25 வரை)

இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் திரைப்படங்கள் (04.08.25 முதல் 10.08.25 வரை)



திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.

படங்கள் ஓடிடி தளங்கள்

பறந்து போ

ஜியோ ஹாட்ஸ்டார்

வெனஸ்டே சீசன் 2

நெட்பிளிக்ஸ்

மாயாசபா

சோனி லிவ்

ஓஹோ எந்தன் பேபி

நெட்பிளிக்ஸ்

மாமன்

ஜீ5

பத்மாசுலு

ஈடிவி வின்

யாதும் அறியான்

ஆஹா தமிழ்

“பறந்து போ”

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்த படம் பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ‘ரோட் டிராமா’வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த 5ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

“வெனஸ்டே சீசன் 2”

பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி காமெடி கலந்த திரில்லர் தொடர் வெனஸ்டே. தற்போது இந்த தொடரின் 2வது சீசன் வெளியாகி உள்ளது. இதில், வெனஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா நடித்துள்ளார். வென்ஸ்டே சீசனின் முதல் எபிசோட் (நேற்று) 6ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

“மாயசபா”

ஆதி பினிசெட்டி மற்றும் சைதன்யா ராவ் நடித்துள்ள படம் மாயசபா. இந்த படத்தை ராஹி அனில் பார்வே இயக்கியுள்ளார். உளவியல் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இதில் வேத் ஜாபரி, முகமது சமத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் (இன்று) 7ந் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

“ஓஹோ எந்தன் பேபி”

விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நடித்துள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை மிதிலா பால்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

“மாமன்”

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் மாமன். இதில் ஐஸ்வர்யா லட்சுமி ,சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

“பத்மாசுலு”

பத்மாசுலு என்பது ஷங்கர் செகுரி இயக்கிய தெலுங்கு நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் கவிதா ஸ்ரீரங்கம், தீக்ஷா கோடேஷ்வர் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படம் நாளை ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

“யாதும் அறியான்”

யாதும் அறியான் என்பது எம். கோபி எழுதி இயக்கிய திரில்லர் படமாகும். இந்த படத்தில் தம்பி ராமையா மற்றும் அப்பு குட்டி , தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *