இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் – (26.05.25 முதல் 01.06.25 வரை) | Movies releasing on OTT this week

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓ.டி.டி தளங்கள் |
வல்லமை | ஆஹா தமிழ் |
கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் | ஜியோ ஹாட்ஸ்டார் |
ஹிட் 3 | நெட்பிளிக்ஸ் |
ரெட்ரோ | நெட்பிளிக்ஸ் |
தொடரும் | ஜியோ ஹாட்ஸ்டார் |
நிழற்குடை | ஆஹா தமிழ் |
ஜாக் | சிம்பிலி சவுத் |
“வல்லமை”
பிரேம்ஜி கதாநாயகனாக நடித்திருந்த படம் வல்லமை. கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார். ஜிகேவி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் குமார் படதொகுப்பை செய்துள்ளார்.
வெளியீட்டு தேதி: மே 26, 2025
எங்கே பார்க்கலாம்: ஆஹா தமிழ்
“கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்”
நடிகர் ஆண்டனி மெக்கீ கேப்டன் அமெரிக்கா நடித்துள்ள படம் “கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்”. மார்வெல் காமிக்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
வெளியீட்டு தேதி: மே 28, 2025
எங்கே பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்
“ஹிட் 3”
நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ஹிட் 3. இந்த படத்தினை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் நானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்
வெளியீட்டு தேதி: மே 29, 2025
எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
“ரெட்ரோ”
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
வெளியீட்டு தேதி: மே 30, 2025
எங்கே பார்க்கலாம்: நெட்பிளிக்ஸ்
“தொடரும்”
தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொடரும்’. இந்த படத்தில் ஷோபனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார்.
வெளியீட்டு தேதி: மே 30, 2025
எங்கே பார்க்கலாம்: ஜியோ ஹாட்ஸ்டார்
“நிழற்குடை”
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் நிழற்குடை. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
வெளியீட்டு தேதி: மே 30, 2025
எங்கே பார்க்கலாம்: ஆஹா தமிழ்
“ஜாக்”
சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஜாக். அச்சு ராஜாமணி இசையமைத்துள்ள இப்படத்தை பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்க பொம்மரில்லு பாஸ்கர் இயக்கியுள்ளார்.
வெளியீட்டு தேதி: மே 30, 2025
எங்கே பார்க்கலாம்: சிம்பிலி சவுத்