இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 3 நட்சத்திர ஹீரோக்களின் படங்கள்|Rejoice, OTT fans! Netflix drops 3 star-hero films this week

சென்னை,
இந்த வாரம், 3 நட்சத்திர ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
முதலில், சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘சிக்கந்தர்’ . இப்படம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை மே 25, 2025) நெட்பிளிக்ஸில் வெளியானது. திரையரங்குகளில் அதைத் தவறவிட்டவர்கள் இப்போது வீட்டிலேயே வசதியாக பார்க்கலாம்.
அடுத்து, நேச்சுரல் ஸ்டார் நானி நடித்த பிளாக்பஸ்டர் படமான ஹிட் 3. இப்படம் வருகிற 29-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
இறுதியாக, சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ. இப்படம் வருகிற 31-ம் தேதி பல மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.