இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் என்னென்ன.. முழு விவரம்

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
படங்கள் | ஓடிடி தளங்கள் |
எலியோ | ஜியோ ஹாட்ஸ்டார் |
தி பேட்ஸ் ஆப் பாலிவுட் | நெட்பிளிக்ஸ் |
சின்னர்ஸ் | ஜியோ ஹாட்ஸ்டார் |
ஹவுஸ்மேட்ஸ் | ஜீ5 |
இந்திரா | சன் நெக்ஸ்ட், டெண்ட்கொட்டா |
போலீஸ் போலீஸ் | ஜியோ ஹாட்ஸ்டார் |
டு மென் | மனோரமாமேக்ஸ் |
மாயக்கூத்து | டெண்ட்கொட்டா |
“எலியோ”
டிஸ்னி-பிக்சரின் அறிவியல் புனைகதையில் உருவான அனிமேஷன் படமான எலியோ. இந்த படம் நேற்று ( செப்டம்பர் 17) அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
“தி பேட்ஸ் ஆப் பாலிவுட்”
அறிமுக இயக்குனர் ஆர்யன் கான் இயக்கி அதிரடி நகைச்சுவை படம் தி பேட்ஸ் ஆப் பாலிவுட். இதில் ஷாருக்கான், ராஜமௌலி, ஆமிர் கான், பாபி தியோல், லக்ஷ்யா மற்றும் ராகவ் ஜுயால் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று (செப்டம்பர் 18) வெளியாகி உள்ளது.
“சின்னர்ஸ்”
ரியான் கூக்லர் இயக்கி நடித்த ஆங்கில திகில் படமான சின்னர்ஸ். இப்படம், உலகளவில் சுமார் 360 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. இதில் ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், மைல்ஸ் கேட்டன் (அவரது திரைப்பட அறிமுகத்தில்), ஜாக் ஓ’கானெல், நடித்துள்ளனர். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ளது.
“ஹவுஸ்மேட்ஸ்”
தர்ஷன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ். இந்த படத்தினை இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ளார். இதில் நடிகை அர்ஷா சாந்தினி பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நாளை (செப்டம்பர் 19ந் தேதி) ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது.
“இந்திரா”
இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த் ரவி நடித்துள்ள படம் இந்திரா. கிரைம் திரில்லர் கதையாக உருவான இப்படத்தில் நடிகர்கள் கல்யாண் மாஸ்டர் , சுனில், அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் மற்றும் டெண்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.
“போலீஸ் போலீஸ்”
மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள வெப்தொடர் ‘போலீஸ் போலீஸ்’. சுஜிதா தனுஷ், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்சென்ட் ராய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.
“டு மென்”
டு மென் என்பது இயக்குனர் சதீஷ் குமார் இயக்கிய மலையாள திரைப்படமாகும். இந்த படத்தில் டோனி டார்வின், அர்பாஸ் இக்பால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 24 மணி நேரத்தில் முடியும் வகையில் இந்த படத்தின் கதைள எழுதப்பட்டிருக்கும். இப்படம் நாளை மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“மாயக்கூத்து”
அறிமுக இயக்குநர் ஏ ஆர் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ ‘மாயக்கூத்து’ திரைப்படத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், மு. ராமசாமி , சாய் தீனா , பிரகதீஸ்வரன், நாகராஜன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வைச் சுட்டிக்காட்டும் இந்தப் படம், கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. இப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.