அக்சய் குமார் நடித்த “ஜாலி எல்எல்பி 3” படம் ஓடிடியில் வெளியானது

அக்சய் குமார் நடித்த “ஜாலி எல்எல்பி 3” படம் ஓடிடியில் வெளியானது


பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அக்சய் குமார். இவர் 1991-ம் ஆண்டு வெளியான ”சவுகந்த்” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு, பல சிரமங்களைச் சந்தித்து ஒரு நட்சத்திர ஹீரோவாகி இருக்கிறார்.

இதற்கிடையில், இவரது நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் ஜாலி எல்எல்பி 3 என்ற படம் வெளியானது. இந்த படத்தில் சவுரப் சுக்லா, அம்ரிதா ராவ், ஹுமா குரேஷி, சீமா பிஸ்வாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சுபாஷ் கபூர் இயக்கியுள்ள இதை ஸ்டார் ஸ்டுடியோ18 மற்றும் காங்க்ரா டாக்கீஸ் தயாரித்துள்ளன. நகைச்சுவை கதைக்களத்தில் வெளியான இந்த படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது.

திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற இப்படத்தின் ஓடிடி ரிலீஸை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில், இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *