War 2 திரை விமர்சனம்

பாலிவுட் சினிமா பேண்டமிக் பிறகு ஒரு நல்ல ஹிட் படத்திற்காக தத்தளித்த போது YRF தயாரிப்பில் வெளியான SPY சீரியல் பாலிவுட் தோல்வி பாதையிலிருந்து மீட்டது.
அந்த வரிசையில் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக ஏற்கனவே ஹிட் அடித்த வார் படத்தின் இரண்டாம் பாகமான வார் 2-ல் இந்த முறை தென்னிந்தியாவிலிருந்து NTR-யையும் இணைத்து பேன் இந்தியா ஹிட் அடிக்க முடிவு செய்து களம் இறங்க, அத்தகைய ஹிட் கிடைத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே ஹிரித்திக் ரோஷன் ஜப்பான் சென்று ஒரு மிஷினை முடிக்கிறார். அங்கு தான் கலி என்ற சீக்ரட் கேங் ஒன்று ஹிரித்திக் ரோஷனை இதை செய்ய வைக்கிறது என தெரிகிறது.
இதை தொடர்ந்து அந்த கலி கேங், ஹிரித்திக் ரோஷனுக்கு அப்பா மாதிரி இருப்பவரை அவர் கையிலேயே கொல்ல வைக்கிறது. பிறகு கலி கேங்-ல் ஒருவராக ஹிரித்திக் சேர்கிறார்.
ஆனால், இவர் தேசத்துரோகி ஆனதால் ஹிரித்திகை பிடிக்க NTR வர, பிற்கு என்ன ஹிரித்திக் ஏன் இப்படி மாறினார்.
NTR ஹிரித்திகை பிடித்தாரா, கலி கேங் சதிதிட்டம் முறியடிக்கப்பட்டதா என்று பார்த்தால் கலி கேங் குறித்து இடைவேளையில் மிகப்பெரிய டுவிஸ்டுடன் முடிய, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஹிரித்திக் ரோஷன் ஒரு ஸ்பை எப்படியிருக்க வேண்டும் என்று சினிமாவிற்கு ஒரு வரையறை உள்ளதோ அதற்கு அளவெடுத்து செய்தது போல் உள்ளார். கண்டிப்பாக நம்ம ஊரில் இருந்து ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் போக வேண்டும் என்றால் கண்டிப்பாக இவரை தேர்ந்தெடுக்கலாம்.
இந்தியாவிற்காக அப்பா சாதனத்தில் உள்ளவரையே கொன்று அந்த வலியுடன் அவர் பயணிப்பது, ஆக்ஷன் என்றால் அதிரடி கிளப்புவது என அவர் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
NTR அவரும் அவர் பங்கிற்கு அதிரடியில் ஆட்டம் காண்பிக்க, இடைவேளையில் செம டுவிஸ்ட் கொடுத்து புருவம் உயர்த்த வைக்கிறார். ஆனால், இவர் வரும் காட்சி கொஞ்சம் மசாலா படம் போல் ஆகிறது. பஞ்ச் டயலாக், டைகர் சத்தம் என அவர் மாஸுக்கு காட்சி அமைத்துள்ளனர்.
கியாரா அத்வானி எல்லாம் ஹீரோயின் வைக்க வேண்டும் என்பதற்காக வைத்தது போல் உள்ளது, அவர் இல்லையென்றாலும் எந்த தொந்தரவும் இருக்காது
இந்த மாதிரி படங்களுக்கு என்றாலே சண்டை காட்சிகள் தான் முக்கியம், ஒவ்வொரு சண்டை காட்சியும் எட்ஜ் ஆப் தி சீட் கொண்டு வரவேண்டும்.
ஆனால், அப்படி எதுவுமே இல்லை, எதோ அடித்துக்கொள்ளுங்கள் என்பது போல் செல்கிறது.
இரண்டாம் பாதி எல்லாம் அடுத்து இதுதானே என்று காட்சிக்கு காட்சி சீன்களை கணிக்கும்படி உள்ளது, எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் கதை நகர்கிறது.
சண்டைக்காட்சிகளுக்கு வரும் சிஜி காட்சிகள் படு சொதப்பல், ஒரு சில இடங்களில் ஏதோ கார்டூன் போல உள்ளது, அதிலும் கார்-யை ட்ரையின் மேல் ஓட்டி செல்லும் காட்சியெல்லாம் சிஜி ஒர்க் சொதப்புகிறது.
டெக்னிக்கலாக படம் ஒளிப்பதிவு, இசை நன்றாக இருந்தாலும் சண்டைக்காட்சிகள், சிஜி எல்லாம் ஏமாற்றமே.
க்ளாப்ஸ்
ஹிரித்திக், NTR பங்களிப்பு.
பல்ப்ஸ்
படத்தின் மந்தமான திரைக்கதை.
சிஜி ஒர்க்