Made in Korea திரை விமர்சனம்

Made in Korea
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரியன் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
கொரியன் கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றும் இளைஞர்கள், இளைஞிகள் மத்தியில் இருக்கும் கிரேஸை அடிப்படையாக கொண்டு ப்ரியங்கா மோகன் நடிப்பில் கார்த்திக் இயக்கத்தில் Netflix தளத்தில் வெளிவந்துள்ள Made In Korea எப்படியுள்ளது பார்ப்போம்.
கதைக்களம்
ப்ரியங்கா மோகன் சிறு வயதில் தமிழகத்திலிருந்து கொரியா சென்ற செண்பகவல்லி ராணி வேஷம் பள்ளியில் போட, அதிலிருந்து கொரியா மீது மிகப்பெரிய காதல் ஏற்பட்டு எப்படியாவது கொரியா போக வேண்டும் என நினைக்கிறார்.
அதே நேரத்தில் ஊரில் தன் பள்ளி தோழன் மணியை(ரிஷிகாந்த்) காதலிக்கிறார், அவரோ பெரிய வேலை இல்லாமல் இருக்க, ப்ரியங்கா மோகனுக்கு அவர் அப்பா வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்.
ப்ரியங்கா மோகன் தன் காதலன் மணியுடன் சென்னை ஓடிபோக, காதலன் மணியோ ப்ரியங்காவை ஏமாற்றிவிட்டு கொரியா ப்ளேட்டில் ஏற்றிவிட்டு, அவர் மும்பை செல்கிறார்.
ப்ரியங்கா தனியாக கொரியா செல்ல, அங்கிருந்து அவர் தடைகளை வென்று புதிய நண்பர்களுடன் வாழ்க்கையில் எப்பஇ ஜெயித்தார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ப்ரியங்கா மோகன் அவர் கெரியரில் அவருக்கு மிக முக்கியமான படம் இந்த மேட் இன் கொரியா. படம் முழுவதும் தன் கியூட், இன்னசண்ட் நடிப்பால் பல இடங்களில் அப்லாஸ் அள்ளுகிறார், அதே நேரத்தில் ஒரு பெண்ணாக வாழ்க்கையை எப்படி ஜெயிக்கிறார் என்பதை வலி, எமோஷன் தாண்டி தைரியமாக அவர் சந்தித்து முன்னேறுவதை காட்டியதற்கு இயக்குனர் கார்த்தி-க்கு வாழ்த்துகள்.
படம் 75% கொரியாவில் நடக்க, அங்கிருக்கும் நடிகர்கள், நடிகைகளையே நடிக்க வைத்துள்ளனர், அவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் ஒரு பாட்டியை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு ப்ரியங்கா செல்கிறார்.
ஆனால், அந்த பாட்டி தனக்கென்று ஒரு கனவு இருக்கிறது என அவர் கனவை சொல்ல, ப்ரியங்காவும் அவருடன் இணைந்து திறக்கும் ஹோட்டல், பிறகு அந்த பாட்டியின் மகனுக்கு உண்மை தெரிந்து அவர் தன் அம்மாவை திட்டும் இடம், பாட்டி வெகுண்டு எழுந்து எனக்குனு ஒரு உலகம் இருக்குனு கத்தி அழுமிடம் எல்லா நாட்டிலும் பெண்களின் எமோஷன் ஒன்று தான் என்பதை இயக்குனர் பொட்டில் அடித்தார் போல் காட்டியுள்ளார்.
அதே நேரத்தில் இது என்ன தான் இவர்கள் படமாக எடுத்திருந்தாலும் நமக்கு எதோ வெப்சீரிஸ் பார்ப்பது போன்ற உணர்வையே தருகிறது. மெதுவாக நகரும் திரைக்கதை, கொஞ்சக் செயற்கையான விஷயங்கள் என சில இடங்களில் நமக்கு அந்நியப்பட்டே இருக்கிறது.
சின்ன சின்ன கியூட் மொமண்ட்ஸ் படத்தில் ஆங்காங்கே வருவது ரசிக்க வைக்கிறது, அழுதுக்கொண்டே இருக்கும் ப்ரியங்காவை பார்த்து ஒரு கொரியா வயலினிஸ்ட் பூங்காற்றிலே பாட்டை வாசிக்கும் இடம் அழகு.
டெக்னிக்கலாக படம் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் பிரமாதம்.
க்ளாப்ஸ்
ப்ரியங்கா மோகன் மற்றும் கொரியா நடிகர்கள், முக்கியமாக அந்த பாட்டி.
டெக்னிக்கல் ஒர்க்
எமோஷ்னல் காட்சிகள்.
பல்ப்ஸ்
சில இடங்களில் மிக செயற்கையாக வசனங்கள் மற்றும் காட்சிகள் இருப்பது.
மெதுவாகவே நகரும் திரைக்கதை.
மொத்தத்தில் இந்த Made In Korea ரொம்ப நல்ல ப்ராடேக்ட் ஆக வரவேண்டியது, ஆனாலும் ஒரு டீசண்ட் ப்ராடேக்ட் ஆக வந்துள்ளது.






