Jurassic World Rebirth திரை விமர்சனம்

ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் எட்வர்ட் இயக்கத்தில் ஸ்கார்லட் ஜான்சன் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள Jurassic World Rebirth எப்படி என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
அழிந்துபோகிற நிலையில் டைனோசர், அதனால் டைனோசர்கள் தாங்கள் வாழ்வதற்கு என்று ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அதில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்களுக்கு ஒரு புதிய நோய் வந்து 5-ல் ஒருவர் இறப்பார்கள், அதற்கான மருந்து அந்த மறைந்து வாழும் டைனோசர்களிடம் தான் உள்ளது என அறிந்து அதை எடுக்க ஒரு டீம் புறப்படுகிறது.
அதே இடத்தில் வேறு ஒரு பகுதிக்கு செல்ல ஒரு குடும்பம் போட்-ல் செல்கிறது, அவர்கள் சென்ற போட் சில டைனோசர்களால் தாக்கப்பட, அவர்களை அந்த டைனோசரிடம் இரத்தம் எடுக்க செல்லும் குழு காப்பாற்றுகிறது.
அதை தொடர்ந்து மிகப்பெரும் டைனோசர் தாக்குதலால், இவர்கள் அனைவரும் டைனோசர்கள் வாழும் தீவில் மாட்டிக்கொள்ள பிறகு என்ன ஆனது என்பதல் சாகசங்களே இந்த Jurassic World Rebirth.
படத்தை பற்றிய அலசல்
ஸ்பீல்பெர்க் உருவாக்கிய ஒரு உலகம் இன்று பல ஆண்டுகள் கழித்தும் இன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலுடன் இருக்கிறது, எத்தனை பாகங்கள் உருவாக்கினாலும்.
ஆனால் ஜுராசிக் பார்க் சீரிஸ் என்றாலே ஒரு பதட்டம் எமோஷ்னல் என அனைத்தும் இருக்கும், அது இந்த பாகத்தில் பெரும் மிஸ்ஸிங் என்று தான் சொல்ல வேண்டும்.
எதோ ஹாலிவுட் படத்திற்கே உள்ள டெம்ப்ளேட் போல் மனித குலம் பாதியாக அழிய போகிறது, அதற்கு மருந்து கண்டிப்பிடிக்க ஒரு தீவுக்கு போகிறார்கள், டைனோசரிடமிருந்து மருந்து எடுக்கிறார்கள் என அரைத்த மாவையே அரைத்து வைத்துள்ளனர்.
என்ன இதில் கூடுதலாக நல்ல பேஸ் வேல்யு உள்ள ஸ்கார்லட் ஜான்சனை இதில் நடிக்க வைத்தது கூடுதல் பலம், ஆனால், நடிப்பு என்று பார்த்தால் ப்ளாக் விட போல் கொஞ்சம் சாகசம் செய்கிறார்.
காட்டிய டைனோசரையே இன்னும் எத்தனை வருடத்துக்கு காட்டுவது என இந்த பாகத்தில் மியூட்டன் டைனோசர் என்று பல வகையான வித்தியாசமான டைனோசரை காட்டியுள்ளனர். ஆனால், அதிலும் பெரிய ஈர்ப்பு இல்லை.
ஒரு குடும்பத்தை போட்டில் ஓடும் ஆற்றில் துரத்தும் டைனோசர் காட்சி மட்டுமே கொஞ்சம் பரபரப்பாக உள்ளது, மற்றப்படி எதுமே எட்ஜ் ஆப் தி சீட் இல்லை. அதிலும் கிளைமேக்ஸில் வரும் டைனோசர் எல்லாம் இது என்ன ஏலியனா என்பது போல் உள்ளது.
டெக்னிக்லாக இசை, ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும், இந்த மாதிரி படங்களுக்கே உண்டான பலம் VFX காட்சி படு சொதப்பல்.
க்ளாப்ஸ்
2,3 டைனோசர் சண்டை காட்சி.
பல்ப்ஸ்
பார்த்து பழகி போன திரைக்கதை.
கிராபிக்ஸ் காட்சிகள்.
மொத்தத்தில் டார்கெட் ஆடியன்ஸிற்கு சலிப்பு தட்டும் ஒரு பாகமாக வந்துள்ளது இந்த Jurassic World Rebirth.
ரேட்டிங்: 2.5/5