Heartin திரை விமர்சனம்

கிஷோர் குமார் இயக்கத்தில் சனத், மடோனா, இமயா என இளைஞர்கள் பாட்டாளத்துடன் இன்றைய ஜென் சி தலைமுறையை குறி வைத்து எடுத்துள்ள இந்த ஹார்டின் எப்படி? பார்ப்போம்.
கதைக்களம்
சனத் வட இந்தியாவில் தமிழ் உணவுகளை கொடுக்கும் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார், அங்கு வரும் சாதனாவுடன் பேசி, பழகி காதல் வரைக்கும் வர, சனத் அந்த காதலுக்குள் போக அஞ்சுகிறார்.
அதன் பின் ஏன் காதல் வேண்டாம் என தன் கல்லூரி காதல் பற்றி சொல்கிறார், மடோனா செபாஸ்டியன், சனத் இருவரும் 3 வருடமாக காதலிக்கின்றனர், ஆனால், கல்லூரி முடிந்த பின் மடோனாவிற்கு இந்த காதல் செட் ஆகாது என முடிவெடுத்து தன் சொந்த ஊருக்கு 10 நாள் செல்கிறார்.
10 நாள் மடோனா பேசாமல் இருக்க சனத் தன் நண்பருடன் மடோனாவை பார்க்க ஊட்டி செல்ல அங்கு சிறு ஆக்சிடண்ட் ஆகிறது, ஆனால், அதையும் தாண்டி மடோனாவை சந்திக்க, இருவரும் பேசி பிரிகின்றனர்.
சனத் இந்த கதையை சொல்லி முடிக்க, சாதனாவுக்கு இன்னும் தான் சனத் மீது காதல் வர பிறகு எப்படியோ அந்த காதல் திருமணம் வரை செல்ல, அந்த நேரத்தில் சனத்திற்கு ஏற்படும் ஆக்சிடண்ட் அவரின் நினைவுகளை அழித்து, மடோனாவை ப்ரேக் அப் செய்த முந்தைய நாளுக்கு செல்ல, தான் இன்னும் மடோனாவை காதலிப்பதாகவும், சாதனாவை யார் என தெரியவில்லை என சொல்ல பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சனத் சிவாவாக காதல் தோல்வி இறுகிய முகம், சாதனாவுடன் பிடிகொடுக்கு பேசாமல் பிறகு காதலை சொல்லுமிடம், தன் நினைவுகள் இழந்து அவர் செய்யும் வேலைகள் என அனைத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.
சாதனாவாக நடித்துள்ள இமாயா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், மடோனாவும் ஆரம்பத்தில் கேரக்டரில் கொஞ்சம் தள்ளி இருந்தாலும் போக போக அவரும் படத்துடன் ஒன்றினைகிறார்.
முதல் பாதி முழுவதும் சிவா-சாதானா இவர்கள் உரையாடல், காதல் அதை தொடர்ந்து சிவா-சாஹித்யா காதல் ப்ரேக் அப் அதை தொடர்ந்து ஒரு விபத்து என நல்ல என்கேஜிங் ஆகவே செல்கிறது.
ஆனால், இடைவேளை விபத்து வரை பெரிய திருப்பம், இம்பாக்ட் இல்லாமலே காட்சிகள் உள்ளது. ஆனாலும், எங்கும் போர் அடிக்கவில்லை.
இதில் குறிப்பாக மடோனா ப்ரேக் அப் செய்ய சொல்லும் காரணம் மிக முக்கியம் இந்த கால காதலர்களுக்கு என்றாலும், அந்த ப்ரேக் அப்-யை சிவாவே எளிதாக கடந்து செல்வது, நமக்கு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இடைவேளையில் ஏற்படும் விபத்தை, கல்லூரி காலத்தில் நண்பருடன் பைக்-ல் கீழே விழும் காட்சி வரை நினைவுகளை அழித்து மடோனாவுடன் காதலில் இருப்பது போல் கொண்டு சென்றது இயக்குனரின் புத்திசாலித்தனம்.
படத்தின் இரண்டாம் பாதி விபத்து, நினைவுகள் இல்லை, அழுக விடுவார்கள் என பார்த்தால் சாஹித்யாவை பார்க்க செல்ல, அங்கு செம ஜாலியாகவே இரண்டாம் பாதியை கொண்டு சென்றது சூப்பர்.
அதிலும் மடோனாவுக்கு மீண்டும் சனத் மீது காதல் வர அவர்கள் பேசும் போது சாதனா டென்ஷன் ஆவது என அங்கங்க நல்ல மொமண்ட் ரசிக்க வைக்கிறது, ஆனால், இரண்டாம் பாதி ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே இடத்தில் சுற்றி சுற்றி நிற்பது போன்ற உணர்வையும் தடுக்க முடியவில்லை.
டெக்னிக்கலாக படம் செம சூப்பர், ஒளிப்பதிவு ஜெய்பூர், ஊட்டி எனானைத்து இடமும் அத்தனை அழகு, அதோடு படம் ஒரு மியூச்சிக்கல் ட்ரீட் போல், ராஜேஷ் முருகஷேன் கலக்கியுள்ளார்.
க்ளாப்ஸ்
நடிகர், நடிகைகங்கள் பங்களிப்பு
டெக்னிக்கல் ஒர்க் முக்கியமாக இசை
சீரியஸ் டோனில் செல்ல வேண்டிய கதையை ஜாலியாக பீல் குட் ஆக கொண்டு சென்றது.
பல்ப்ஸ்
முதல் பாதி சனத்-மடோனா காதல் காட்சிகள் பெரிதும் ஒட்டவில்லை
இரண்டாம் பாதி ஜாலியாகவே சென்றாலும், கொஞ்சம் கதை அடுத்தக்கட்டம் நகராமலே சென்றது.






