CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ


கரூர் துயர சம்பவம்

நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடந்த சனிக்கிழமை அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது இந்திய அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த நிலையில், அன்றிரவே கரூர் மக்களை நேரில் சென்று சந்திக்க காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளார் விஜய். ஆனால், அவர்கள் அனுமதி தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ | Tvk Vijay Karur Stampede Condolence Video

கரூரில் அந்த துயர சம்பவம் நடந்த முடிந்த நிலையில், தற்போது மூன்று நாட்களுக்கு பின் விஜய் தனது எக்ஸ் தளத்தில் மிகவும் எமோஷனலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் வெளியிட்ட வீடியோ

இதில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். பின், CM சார் என்ன பழிவாங்கும் எண்ணம் இருந்தால், நான் என் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருப்பேன் என்ன என்னவேணுமாலும் பண்ணுங்க” என கூறியுள்ளார். 

“கரூர் சென்று கூடிய விரைவில் மக்களை சந்திக்கிறேன். மக்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும், பாசத்திற்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். எனது வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்து இல்லை”.



“சூழலை புரிந்துகொண்ட எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி. இன்னும் வலிமையாகவும், தைரியமாகவும் அரசியல் பயணம் தொடரும்”.

இதோ அந்த வீடியோ..




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *