9 கிலோ உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்.. எப்படி தெரியுமா? இதோ அந்த டிப்ஸ்

கீர்த்தி சுரேஷ்
தீவிரமான கார்டியோ பயிற்சிகள் மூலம் தனது உடல் எடையை குறைத்தது குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
உடல் எடை குறைத்தது எப்படி
“2019ல் நான் கொஞ்சம் பருமனாக இருந்தேன். பின், அதனை குறைக்க அதிகமாக கார்டியோ செய்தேன். ஆனால், வலிமைக்கான பயிற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை. அதனால் தசையை இழந்துவிட்டேன், எடையும் விரைவாக குறைந்தது” என கூறியுள்ளார்.
அதற்கான முடிவுகள் மிக தெளிவாக தெரிந்தன, முக கூர்மையான வடிவத்துடனும், மிகவும் மெலிந்த தோற்றத்துடனும் இருந்தது. அந்த நேரத்தில் என் முக அளவுக்கு மீறி ரொம்பவே ஒல்லியாக தெரிந்தது. நான் உடற்பயிற்சி மட்டும்தான் செய்யவில்லை. மற்றபடி தூங்குவது, சாப்பிடுவது, வேலை செய்வது என இதையே மீண்டும் மீண்டும் செய்து வந்தேன்” என்றார் கீர்த்தி.
உடற்பயிற்சி நிபுணர்களின் பரிந்துரை:
-
வாரத்திற்கு குறைந்தது 2 முதல் 3 நாட்கள் வலிமை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். -
கார்டியோ மற்றும் வலிமை பயிற்சியின் சமநிலை, skinny fat தோற்றத்தை தடுக்கும்.
கீர்த்தியின் இப்போதைய அணுகுமுறை:
-
கீர்த்தி சுரேஷ் தற்போது தனது உடற்பயிற்சி திட்டத்தில் வலிமை பயிச்சியையும் இணைத்துள்ளார். - விரைவான தீர்வுகளை விட, நீண்டகால ஆரோக்கியமே அவரது குறிக்கோளாக உள்ளது.
நிபுணர்கள் வாரத்திற்கு:
-
150 முதல் 300 நிமிடங்கள் மிதமான தீவிர கார்டியோ -
அல்லது 75 முதல் 150 நிமிடங்கள் அதிக தீவிர செயல்பாடு மற்றும் வலிமை பயிற்சியை மேற்கொள்ள வலியுறுத்துகிறார்கள்.
இவ்வாறாக, நடிகை கீர்த்தி சுரேஷும் அனுபவம் எடை குறைப்பில் அதிகம் கவனம் செலுத்துவதில் இருந்து, சரியான முறையை மேற்கொள்வதே உடலை சீராக வைத்திருக்க உதவும் என்பதை தெளிவாக காட்டுகிறது.