8 நாட்களில் நூறு சாமி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நூறு சாமி
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் நூறு சாமி. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார்.
இப்படத்தில் அஜய், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான நூறு சாமி திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நடிகை ஸ்வாசிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். அதற்காக அவர் ஆனந்த கண்ணீருடன் வீடியோ கூட வெளியிட்டுள்ளார்.
வசூல்
இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் உலகளவில் நூறு சாமி திரைப்படம் ரூ. 12 கோடி வசூலித்துள்ளது.






