24 மணி நேரமும் அதை செய்கிறேன்.. ஓப்பனாக சொன்ன நடிகை மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன்
இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.
ஓபன் டாக்!
இந்நிலையில், சினிமா குறித்து அவர் பகிர்ந்த விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” சினிமா என் விருப்பமான ஒன்று. ஆனாலும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள முடியாமல், ஒருநாள் கூட விடுமுறை எடுக்க முடியாமல் 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.