22 வயதிலேயே விவாகரத்து அறிவிப்பு.. பிக் பாஸ் சாச்சனாவின் ட்வின் சகோதரி

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்து பிரபலம் ஆனவர் சாச்சனா. அவர் அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
விஜய் சேதுபதி தான் அந்த ஷோவையும் தொகுத்து வழங்கி இருந்தார். சாச்சனா அந்த ஷோவில் பல நெகடிவ் விமர்சனங்கள் தான் சந்தித்தார்.
சாச்சனாவின் இரட்டை சகோதரி சாதனா உடன் அவர் இருக்கும் போட்டோக்களையும் இணையத்தில் அதிகம் பார்த்திருப்போம்.
விவாகரத்து
தற்போது 22 வயதாகும் சாதனா திடீரென விவாகரத்தை அறிவித்து இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார்.
அவரது கணவர் முரளி என்பவரை பரஸ்பர விவாகரத்து உடன் பிரிவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.