20 வருடத்தை எட்டிய விக்ரமின் அந்நியன்.. படம் செய்துள்ள மொத்த வசூல்

அந்தியன்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக பல படங்கள் இயக்கி மக்களை வியக்க வைத்தவர் ஷங்கர்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்திலும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயம் இருக்கும்.
கடந்த 2005ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் என பலர் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் அந்நியன்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அப்பாவி அம்பி, காதல் ரெமோ, அந்நியன் என மூன்று பரிமாணங்களில் நடித்து மிரட்டியிருப்பார்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த படம் வெளியாகி இன்றோடு 20 வருடத்தை எட்டிவிட்டது.
இப்போதும் மக்களால் கொண்டாடப்படும் இப்படம் கிட்டத்தட்ட ரூ. 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட ரூ. 90 கோடி வரை வசூல் வேட்டை செய்து சாதனை படைத்துள்ளது.