1995ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்கள்

1995ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்கள்

இந்திய சினிமா என்று எடுத்துக் கொண்டாலே அதில் தமிழ் சினிமா முக்கிய பங்கு வகிக்கும்.

மற்ற மொழி படங்களில் நடக்காத சாதனைகள் எல்லாம் இங்கே நடந்துள்ளது. இப்படி மக்கள் அனைவரும் அதிக கவனிக்கும் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஏகப்பட்ட நல்ல கதையுள்ள படங்கள் அமைகின்றன.

அப்படி நாம் இப்போது 1995ம் ஆண்டில் வெளியான சில தரமான சூப்பர் ஹிட் படங்களை பற்றி காண்போம்.

1995ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்கள் | 1995 Best Tamil Movies

பாட்ஷா

இது என்ன படம், கதை, இயக்குனர், நடிகர்கள் என எதை பற்றியும் யாருக்கும் சொல்ல வேண்டியது இல்லை.

காரணம் அந்த அளவிற்கு இப்படம் குறித்து மக்களுக்கு அத்துபடி. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, ரகுவரன், நக்மா என பலர் நடித்த இப்படம் ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக அமைந்தது.

அதிலும் படத்தில் இடம்பெற்ற மாஸ் வசனங்கள், தேவா அவர்களின் இசை எல்லாம் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது.

பாக்ஸ் ஆபிஸ் கலக்கிய இப்படத்தை இப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் புதிய படத்திற்கு இணையாக ஆர்வமாக ரசிகர்கள் பார்ப்பார்கள்.

1995ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்கள் | 1995 Best Tamil Movies

பாம்பே

மதம் சார்ந்தது அல்ல காதல், அது மனம் சார்ந்தது என்பதை உணர்த்தும் படமாக அமைந்தது மணிரத்னம் அவர்களின் பாம்பே. என்டர்டெய்ன்மென்ட் என்பதை தாண்டி சில படங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

அப்படி மணிரத்னம் இயக்க அரவிந்த் சாமி-மனிஷா கொய்ராலா முக்கிய வேடத்தில் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த படம் தான் பாம்பே.

1995ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்கள் | 1995 Best Tamil Movies

சதிலீலாவதி

பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல்ஹாசன், கோவை சரளா, ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா என பலர் நடிக்க வெளியானது சதி லீலாவதி. காமெடி, காதல், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையான இப்படத்திற்கு இளையராஜா தான் இசை.

1995ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்கள் | 1995 Best Tamil Movies

குருதிப்புனல்

ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் போன்றோர் நடிப்பில் வெளியான படம் குருதிப்புனல்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் 1995ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

மிகவும் தரமான ஒரு போலீஸ் கதையாக அமைந்தது.

1995ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்கள் | 1995 Best Tamil Movies

முத்து

ரஜினியின் திரைப்பயணத்தில் அமைந்த ஹிட் படங்களில் முத்து முக்கியமான படம். ரஜினி, மீனா, சரத்பாபு, ரகுவரன், ராதா ரவி என பலர் நடிப்பில் வெளியான ஐமீன்தார் குடும்பத்தை பற்றிய கதை.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான தில்லானா தில்லானா பாடலுக்கு இடுப்பை ஆட்டி நடனம் ஆடாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.   

1995ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த படங்கள் | 1995 Best Tamil Movies

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *