1990ல் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

1990ல் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

1990ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அஞ்சலி

தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணி ரத்னம். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றி வரும் இவர் இயக்கத்தில் உருவான தரமான திரைப்படங்களில் ஒன்று அஞ்சலி. சிறுவர், சிறுமினிகளை வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இப்படத்தை எடுத்திருப்பார். இப்படத்தில் ரகுவரன், ரேவதி, பிரபு ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

1990ல் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | 1990 Best Tamil Movies

மைக்கேல் மதன காமராஜன்

நான்கு கதாபாத்திரங்களில் நடித்து, நகைச்சுவையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் நடிகர் கமல் ஹாசன். இளையராஜாவின் இசை, சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கம், கிரேசி மோகன் வசனம் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. இப்படத்தில் கமலுடன் இணைந்து குஷ்பூ, ஊர்வசி, மனோரமா, நாகேஷ், நாசர், சந்தானபாரதி ஆகியோர் நடித்திருந்தனர்.

1990ல் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | 1990 Best Tamil Movies

புலன் விசாரணை

ஆக்ஷன் ஹீரோ கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் உருவான திரைப்படம் புலன் விசாரணை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சரத்குமார், ரூபிணி, ராதாரவி, ஆனந்த்ராஜ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். விஜயகாந்தின் டாப் ஹிட் திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

1990ல் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | 1990 Best Tamil Movies

அதிசய பிறவி

பாண்டஸி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக 1990ல் வெளிவந்து இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது அதிசய பிறவி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தை எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருந்தார். இப்படத்தில் கனகா, சின்னி ஜெயந்த், சோ ராமசாமி, வி.கே. ராமசாமி, நாகேஷ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

1990ல் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | 1990 Best Tamil Movies

கிழக்கு வாசல்

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் கார்த்தி, ரேவதி, குஷ்பூ, சின்னி ஜெயந்த், மனோரமா நடிப்பில் உருவான திரைப்படம் கிழக்கு வாசல். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட். 

1990ல் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை | 1990 Best Tamil Movies

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *