1800 கோடி வசூல் செய்த இயக்குநருடன் இணையும் ஷாருக்கான்? வெறித்தனமான கூட்டணி

ஷாருக்கான்
பதான், ஜவான், Dunki என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த ஷாருக்கான் தற்போது தனது மகள் படத்தில் பிஸியாக இருக்கிறார். ஷாருக்கானின் மகள் சஹானா கான் கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் தனது மகளுடன் இணைந்து ஷாருக்கான் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவருடைய அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தற்போது மைத்திரி மூவி மேக்கர்ஸ் வலம் வருகிறார். குட் பேட் அக்லி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்தனர் மேலும் தற்போது பாலிவுட் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
புஷ்பா இயக்குநருடன் ஷாருக்கான்
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஷாருக்கான் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்த புஷ்பா 2 படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமார்தான் இப்படத்தை இயக்கவுள்ளாராம்.
ஆனால், ஷாருக்கான் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் சந்திப்பு இதுவரை நடக்கவில்லை என நடிகரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தனது மகள் சஹானா நடித்து வரும் கிங் திரைப்படத்தை முழுமையாக முடித்தபிறகு தான் தனது அடுத்த படத்தை பற்றியும், இயக்குநர் பற்றியும் ஷாருக்கான் முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது.