15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் – தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் – தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு


நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் இன்று நடந்த யோகிடா படத்தின் விழாவில் அறிவித்தனர்.

மேடையில் தன்ஷிகா பேசும்போது விஷால் பற்றி வெளிப்படையாக பேசினார். ”ஆம் நாங்கள் காதலிக்கிறோம். 15 வருடமான நட்பில் இருந்தோம், அதன் பின் பேச தொடங்கியபோது இது திருமணத்தில் தான் முடியும் என இருவருக்கும் தோன்றியது, அதனால் முடிவெடுத்துவிட்டோம்.”

“ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. அன்று தான் விஷாலின் பிறந்த நாள். ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து எங்கள் திருமணம் நடக்க இருக்கிறது.”

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு | Vishal Sai Dhanshika Marriage How Love Started

சண்டை வரக்கூடாது..

விஷால் பேசும்போது..

”என்னைவிட தன்ஷிகா உடன் friendly ஆக இருக்கும் நபர் என் அப்பா தான். தன்ஷிகா ஒரு wonderful person. கண்டிப்பாக நாங்க வடிவேலு – சரளா அம்மா மாதிரி ஒரு ஜோடியாக இருங்க மாட்டோம். யோகிடா சண்டை காட்சிகள் பார்க்கும்போது நான் கொஞ்சம் சூதானமா இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

கிக் என் தலை வரை வருகிறது. பாண்டியன் மாஸ்டரிடம் சென்று அதை block செய்வது எப்படி என கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால் அந்த அளவுக்கு சண்டை வரக்கூடாது. எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கேன்.


விஜயசாந்திக்கு பிறகு தன்ஷிகா தான் சிறப்பாக சண்டை காட்சிகளில் நடித்து இருந்தார். நான் ஆக்ஷன் ஹீரோ என சும்மா சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எங்க வீட்டுக்கு security தேவை இல்லை, நாங்க ரெண்டு பேரும் தான் செக்யூரிட்டி.


தன்ஷிகாவை வாழ்நாள் முழுக்க இதே போல சிரித்த முகத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

இவ்வாறு விஷால் பேசி இருக்கிறார்.
 

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு | Vishal Sai Dhanshika Marriage How Love Started


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *