15 நாட்களில் அவதார் 3 படம் செய்துள்ள வசூல் இவ்வளவு கோடியா? விவரம் இதோ

அவதார் 3
உலகப்புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் அவதார் 3.
இதற்கு முன் வெளிவந்த இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த அவதார் 3 கலவையான விமர்சனங்களை பெற்றது.
வசூல்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை என்பதால் பாக்ஸ் ஆபிஸிலும் சற்று சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், அவதார் 3 படம் 15 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 15 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 9100 கோடி வசூல் செய்துள்ளது. இதில், இந்தியாவில் மட்டுமே ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






