1000 கோடி பட்ஜெட்.. ராஜமௌலியின் வாரணாசி ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது பாருங்க

1000 கோடி பட்ஜெட்.. ராஜமௌலியின் வாரணாசி ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது பாருங்க


இயக்குனர் SS ராஜமௌலி அடுத்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் வாரணாசி. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் அதில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவையே ராஜமௌலி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். அதற்கே 30 கோடி ரூபாய் வரை செலவானதாக வந்த தகவல் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளித்தது.

1000 கோடி பட்ஜெட்.. ராஜமௌலியின் வாரணாசி ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது பாருங்க | Ss Rajamouli Mahesh Varanasi Babu Release Date

ரிலீஸ் தேதி

இந்நிலையில் தற்போது வாரணாசி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். அடுத்த வருடம் 2027 ஏப்ரல் 7ம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக போஸ்டர் உடன் அறிவிப்பு வந்திருக்கிறது.

அதில் ஒரு விண்கல் பூமியில் வந்து விழுவது போல காட்டப்பட்டு இருக்கிறது. போஸ்டர் இதோ 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *