100 பாட்ஷாக்கு சமம் இந்த கூலி, நீங்க தான் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்… ரஜினி குறித்து நாகர்ஜுனா, உபேந்திரா

கூலி படம்
அரங்கம் அதிரட்டுமே என சொல்லும் அளவிற்கு இன்று பிரம்மாண்டத்தின் உச்சமாக கொண்டாட்டத்தின் உச்சமாக நடக்கிறது நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் நிகழ்ச்சி.
நிகழ்ச்சி நடந்துவரும் இடையில் கூலி படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது, இப்போதே சமூக வலைதளங்களில் செம டிரெண்டாகிவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் நாகர்ஜுனா பேசும்போது, 100 பாட்ஷாக்கு சமம் இந்த கூலி, நீங்க தான் ஒரிஜினல் சூப்பர் ஸ்டார் என்றார்.
அதேபோல் கன்னட சினிமா நடிகர் உபேந்திரா பேசும்போது, Kollywood, Bollywood, Sandalwood, Tollywood என எல்லா இன்டஸ்ட்ரியிலும் ஸ்டார்ஸ் இருக்காங்க, பேன்ஸ் இருக்காங்க.
ஆனா உங்க படம் வந்தா பேன்ஸ் இல்ல ஸ்டார்ஸ் நாங்களே பேன்ஸ் மாதிரி போய் பார்ப்போம் என்றார்.